வழிமேல் விழி வைத்து திரையரங்க வெளியீட்டுக்கு காத்திருக்கும் அருண் விஜயின் புது படம்!
அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' தியேட்டரில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
இயக்குனர் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ள படம் 'பார்டர்'. அருண் விஜய் இப்படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனோ இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் 'பார்டர்' திரையரங்கில் வெளியாகாது என கூறப்பட்டு வந்தது.
ஆனால் இரண்டாம் அலை விரைவில் சரியாகிவிடும் என்பதாலும் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதாலும் 'பார்டர்' படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.