"அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு" - தசாவாதாரம் பற்றி அல்போன்ஸ் புத்ரனுக்கு வகுப்பெடுத்த கமல்ஹாசன்!

Update: 2021-06-20 07:15 GMT

"அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு" என தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன் படங்களை பற்றி கேள்வி எழுப்பி அல்போன்ஸ் புத்திரனுக்கு கமல் பதிலளித்துள்ளார்.



 


தற்பொழுது தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த படத்தின் காட்சி அமைப்புகள், கதை நேர்த்தி, திரைக்கதை வடிவமைப்பு என அனைத்திலும் பிரமிப்பு காட்டி குறிப்பிட்டு திரைபிரபலங்கள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கமலுக்கு ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். அதில், "உங்களின் தசாவதாரம் படம் ஒரு பி.எச்.டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா'' என கமலுக்கு கோரிக்கை வைத்தார்.



இதற்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்'' என்றார்.

Similar News