ஓணம் பண்டிகையில் வெளி வர இருக்கும் மோகன்லாலின் 'மரைக்கார்'!

Update: 2021-06-20 07:30 GMT

ஓணம் பண்டிகையன்று மோகன்லாலின் 'மரைக்கார்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படம் மரைக்கார். கொரோனா அச்சுறுத்தலால் பலமுறை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக மே 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதுவும் நிறுத்தப்பட்டது.


தற்பொழுது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் படத்தின் வெளியீட்டை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக மோகன்லால் தனது டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். "உங்களின் பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும் மரக்கார் படத்தை ஆகஸ்ட் 12 அன்று ஓணம் வெளியீடாக உங்களுக்கு வழங்குகிறோம், நம்பிக்கையோடு இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Similar News