லூசிபர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணி!
இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜ் சுகுமாரன் மோகன்லாலுடன் மீண்டும் இணைகிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லாலை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதன் முதலில் ₹200 கோடி வசூலை ஈட்டிய மலையாள படம் என்கிற பெயரையும் பெற்றது. தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற படம் லூசிபர்.
இந்நிலையில் மீண்டும் மோகன்லாலை வைத்து "ப்ரோ டாடி" என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் பிரித்விராஜ். லூசிபர் படத்தை தயாரித்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.