"வெப் சீரிஸ் இயக்குவதில் சுதந்திரம் உள்ளது" - இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!
90'களில் பிரபலமான இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா 'வெப் தொடர்களில் சுதந்திரம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து மெகா ஹிட் படங்களை அளித்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இவர் தற்பொழுது 'இன் த நேம் ஆப் காட்' என்ற தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், "காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள, சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வர முடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்" என்றார்.