ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் பிரம்மாண்ட பாடல் - ஒரு மாதம் படமாக்க திட்டமிடும் ராஜமௌலி!
படத்தை போலவே பாடலையும் பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் இன்னும் ஒரு பிரமாண்டமான பாடல் காட்சியை படமாக்க இருக்கிறாராம்.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல் கிட்டத்தட்ட எட்டு நிமிட நீளம் கொண்ட பாடலாம்.
இந்தப்பாடல் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமௌலி.