அடுத்தது ஹாரர் படம்.. ரசிகர்கள் வியப்பு!

Update: 2021-06-24 14:45 GMT

இயக்குனர் டீகே இயக்கத்தில் புதிய ஹாரர் படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.


சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸில் நடித்தார் காஜல் அகர்வால், பெரும் வரவேற்பை பெற்ற இதன் தொடர்ச்சியாக இயக்குனர் டீகே இயக்கத்தில் புதிய ஹாரர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் காஜல்.


யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் டீகே, இவர் தற்பொழுது காஜல் அகர்வாலை மையமாக வைத்து புதிய ஹாரர் படத்தை இயக்க கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News