நடிகர், நடிகைகள், திரைப்பட தொழிலாளர்களுக்கு நிவாரணம் - வேண்டுகோள் விடுக்கும் ஆர்.கே.செல்வமணி!
கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தமிழக முதல்வரிடம் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, "கொரோனா தொற்றின் முதல் அலையை விட இந்த முறை தான் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். கடந்த முறை நடிகர், நடிகைகள் அதிக அளவில் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்த ஆண்டு குறைவாக இருக்கிறது. எனவே நடிகர், நடிகைகள் இன்னும் உதவ வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார்.