இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கணா ரனாவத்!

Update: 2021-06-25 02:15 GMT

இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.


மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'எமெர்ஜன்ஸி' என்ற படம் தயாராகிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.


தற்போது இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். முன்னதாக இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த 'தலைவி' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News