"என் பயோபிக் திரைபடத்துக்கு சூர்யா தான் பெஸ்ட் சாய்ஸ்" - சுரேஷ் ரெய்னா!
"என் வாழ்க்கை பயோபிக்க்க்க்இஇல் நடிக்க சூர்யா தான் பெஸ்ட் சாய்ஸ்" என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரி கோம், மில்கா சிங் உள்ளிட்டவர்களின் விளையாட்டு வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛என் பேவரைட் ஹீரோ எப்போதும் சூர்யா தான். என்னுடைய பயோபிக்கில் நடிக்க அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார்'' என்று கூறினார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.