சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாகும் முன்னணி நடிகை - கோலிவுட் அதிர்ச்சி!
கார்த்தியின் அடுத்த படமான சர்தார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். சமீபத்தில் இதன் முதல் பார்வை வெளியாகியது, இதில் கார்த்தி வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் இருப்பது போன்ற தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லத்தனம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன் என்பது குறிப்பிடதக்கது.