'தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெறும் போது நான் கூடாதா?' - சீறும் பிரகாஷ்ராஜ்!

Update: 2021-06-27 05:30 GMT

"தெலுங்கரான விஷால் தமிநாட்டில் உள்ள நடிகர் சங்கத்தின் தலைவராகும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத்தில் தலைவராக முடியாதா?" என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில் 'பிரகாஷ்ராஜ் கன்னடர் அவர் எப்படி தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிட முடியும்?' என்ற கேள்வி அங்கே எழுந்துள்ளது.

இதுபற்றி பிரகாஷ்ராஜ் கூறும் போது, "நான் தெலுங்கில் நடிக்க வரும்போது யாரும் நான் வெளி மாநிலத்தவன் என்று சொல்லவில்லை. நான் இங்கே, சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். எனக்கு இங்கேயே வீடும் உள்ளது. எனது ஆதார் கார்டும் ஆந்திரா முகவரியில் தான் உள்ளது. எனது பிள்ளை இங்கேதான் படிக்கிறான். நான் ஆந்திராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாரும் நான் வெளிமாநிலத்தவன் என்று சொல்லவில்லை.


தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது? அந்தப்புரம் என்ற தெலுங்கு படம் தானே எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தது. தெலுங்கு படங்களில் நடித்துத்தானே 9 நந்தி விருதுகளை வாங்கினேன்" என அவர் விளக்கத்துடன் கூடிய கேள்வியை தெலுங்கு திரையுலகை நோக்கி எழுப்பியுள்ளார்.

Similar News