மலையாளத்தில் மகிழ்ச்சியான படங்கள் குறைந்துவிட்டன - ஏங்கும் பிரித்விராஜ்!

Update: 2021-06-27 05:30 GMT

"மலையாளப் படங்கள் எல்லாம் இறுக்கமாக, மர்மக் கதையாக, கொலைகாரனைக் கண்டுபிடிப்பவையாக இருக்கின்றன" என்கிறார் நடிகர், இயக்குனர் பிரித்விராஜ்.


கொரோனோ முடிவடையும் போது மோகன்லாலை வைத்து 'ப்ரோடாடி' படத்தை இயக்கவிருக்கும் பிரித்விராஜ் கூறியதாவது, "மலையாள சினிமாவில் கொண்டாட்டமான, ஜாலியான படங்கள் வெளிவந்து ரொம்ப காலமாகி விட்டது. அதுமாதிரியான படங்களுக்கு நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கி வைத்துவிடுவோம்.

அதனால்தான் மலையாளப் படங்கள் எல்லாம் இறுக்கமாக, மர்மக் கதையாக, கொலைகாரனைக் கண்டுபிடிப்பவையாக இருக்கின்றன.


என் பார்வையில், மலையாளத் திரையுலகில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகிழ்ச்சியான திரைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை என்று தோன்றுகிறது. இந்த நேரத்தில் தான் மோகான்லாலை வைத்து ஜாலியான கதையாக 'ப்ரோடாடி' படத்தை இயக்குகிறேன்" என்றார்.

Similar News