நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகிறது வெங்கடேஷ் நடித்த 'அசுரன்' தெலுங்கு பதிப்பு.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் 'அசுரன்', தமிழில் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தாணு, தெலுங்கில் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தெலுங்கில் 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை வெளியிட முடியவில்லை. இதனிடையே, இப்படத்தை ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியிடும் உரிமை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெங்கடேஷ் நடித்துள்ள மற்றொரு படமான 'த்ரிஷ்யம் 2' படத்தையும் ஓ.டி.டி-யில் தான் நேரடியாக வெளியிட உள்ளார்கள். வெங்கடேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து நேரடி ஓ.டி.டி வெளியீடு தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.