"இனிமே இப்படிலாம் செய்யாதீங்க" - ரசிகரின் செயலால் நொந்த ராஷ்மிகா!

Update: 2021-06-28 02:30 GMT

900 கி.மீ பயணம் செய்து நடிகை ராஷ்மிகாவை காண வந்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்து, சுமார் 900 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார். ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார்.


இதனால் சந்தேகமடைந்த சிலர் போலீசில் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் எச்சரித்து அவரை அனுப்பினர். இதையடுத்து ரஷ்மிகா தனது ரசிகரிடம், 'டுவிட்டர்' வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம்.


உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன்" என கூறியுள்ளார்.

Similar News