பழம்பெரும் சந்திரலேகா பட நடிகை ஜெமினி ராஜேஸ்வரி நேற்று மூச்சு திணறலால் காலமானார்.
ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானார். அவருக்கு வயது 94.
கமல்ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு மற்றும் மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஜெமினி ராஜேஸ்வரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.