"கமலின் நடிப்பை பார்த்து சினிமாவிற்கு வந்தவன்" - கமலுடன் நடிப்பது பற்றி நடிகர் நரேன்!

Update: 2021-06-29 02:15 GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் புதிதாக நடிகர் நரேன் இணைந்துள்ளார்.


இது குறித்து நரேன் அளித்த பேட்டியில், "கமலின் நடிப்பை பார்த்து, சினிமாவிற்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமின்றி, இயக்குனரும் கமலுடைய பெரிய ரசிகர்கள். இன்று அவருடன் நான் நடிக்கப் போகிறேன் என்பது கனவு போல் உள்ளது. கைதிக்கு பின் இரண்டு படம் முடியும் தருவாயில் உள்ளது. நல்ல கதைகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் இடைவேளை அதிகரிக்கிறது.


கைதிக்கு பின் நான் நடித்து வரும் விரைவில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளன" என தெரிவித்தார் அவர்.

Similar News