வலிமைக்கு அடுத்தபடியாக மம்முட்டி படத்தை ரீமேக் செய்யும் போனி கபூர்!

Update: 2021-06-29 02:15 GMT

வலிமை பட தயாரிப்பிற்கு அடுத்தபடியாக மம்முட்டியின் படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.


கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய மொழிகளில் படம் தயாரிப்பது, இங்கே ஹிட் ஆகும் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வது என பிரபல தயாரிப்பாளராக மாறிவிட்டார் போனி கபூர்.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான, மம்முட்டி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்த, தி ஒன் என்கிற படத்தின் ஹிந்தி உட்பட மற்றும் சில மொழிகளின் ரீமேக் உரிமையையும் கைப்பற்றியுள்ளார் போனி கபூர். மலையாளம் அல்லாத பிற மொழிகளில் மிகப்பெரிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

Similar News