அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் உற்சாகமாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்த், தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்த 19ம் தேதி அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்கு இடையே உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் தனது பழைய நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று ஆச்சர்யமளித்து வருவதால் மிகுந்த புத்துணர்ச்சியோடு நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார்.
பரிசோதனைகளில் ரஜினி முழு உடல்நலத்துடன் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடல்நல பரிசோதனை தேவையில்லை என்றும் கூறியிருப்பதால் ரஜினி குடும்பத்தினர் உற்சாகமாக உள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியே ரஜினியின் உற்சாகத்துக்கு காரணம் என்கிறார்கள். ரஜினி அமெரிக்காவில் இருந்து ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார்.