துவங்கியது நடிகர் விஜய் 'பீஸ்ட்' படப்பிடிப்பு - முதலில் பாடல்களாம்!

Update: 2021-07-02 03:00 GMT

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று ஜுலை 1-ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.


நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படம் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனோ காரணமாக தடைபட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.


விஜய் மற்றும் பூஜா இணைந்து நடிக்கும் நடனக் காட்சியுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாம். இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் வரை சென்னையில்தான் நடக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2022 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News