கையில் கரண்டி பிடித்து சிம்பு சமையல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு முழு வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார், சமீபத்திய உரையாடல் ஒன்றில் "நான் குடி பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆகிறது" என வெளிப்படையாகவே தெரிவித்தார். இதனையடுத்து மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தாயாராக உள்ளன.
சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்பாக இயக்கும் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.