வெளியான வலிமை ரிலீஸ் தகவல்? தல அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

Update: 2021-07-03 03:00 GMT

'அண்ணாத்த', 'பீஸ்ட்' படங்களுக்கு முன்பே அஜித்'ன் பீஸ்ட் வெளியாகும் என தெரிகிறது.


தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ற படம் என்றால் அது அஜித்'ன் வலிமைதான். அந்தளவிற்கு அப்படத்தின் ஒரு போஸ்டர் கூட வெளிவராதா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி இருப்பதால் அதனை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முடித்துவிடலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என்று மீண்டும் உறுதி செய்துவிட்டார்கள். விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் தான் ஆரம்பமாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் வெளி வரும். ஆனால் இவ்விரு படங்களுக்கு முன்பே வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி அன்றே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News