ஜானி மாஸ்டர் பிறந்தநாள் பாட்டியுடன் களைகட்டிய தளபதி விஜய் 'பீஸ்ட்' படப்பிடிப்பு!

Update: 2021-07-03 08:00 GMT

நடன இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது விஜயின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு.


கொரானா இரண்டாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பீஸ்ட் படப்பிடிப்பு. தற்பொழுது கொரானா தொற்று குறைந்ததால் அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன் தினம் படப்பிடிப்பு தொடங்கியது.


சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார். ஜானி மாஸ்டர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரோடு இணைந்து ஜானி மாஸ்டர் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். விஜயும் தன் பங்கிற்கு நடன இயக்குனர் ஜானியை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் கூறி உற்சாகப்படுத்தினார்.

Similar News