பட வாய்ப்பு இல்லாததால் அரசை எதிர்க்கும் திரைத்துறையினர் லிஸ்டில் சேர்ந்த அமீர் - "பஞ்ச் டயலாக் பேசுபவர்களே, போராட வாங்கோ" என கூவிக்கூவி அழைப்பு!

Update: 2021-07-03 07:45 GMT

மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்திற்கு எதிராக கதாநாயகர்களை போராட அழைத்துள்ளார் இயக்குனர் அமீர்.

மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் 4 திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது படங்கள் வெளிவந்த பிறகும் அதன் மீதான புகார்கள் வந்தால் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவது, இதனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமுதாயத்தை கேலி செய்வது, புண்படுத்துவது போன்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படும், மேலும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் படைப்புகளும் கட்டுப்படுத்தப்படும்.

ஆனால் இதை சில சினிமாவை சேர்ந்த பிரமுகர்கள் "எங்கள் குரல்வளையை நெறிக்கும் செயல்" என புரியாமல் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் படத்தில் பன்ச் டயலாக் பேசி வீரம் காட்டும் ஹீரோக்கள் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021-ஐ படத்தில் பன்ஞ் டயலாக் பேசி வீரம் காட்டும் ஹீரோக்கள் உள்பட அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது" என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News