யோகி பாபு, கிரிக்கெட் வீரர் நடராஜன் சந்திப்பு - முருக கடவுள் சிலையை பரிசளித்த 'தமிழ் ஸ்டாக்'!
நடிகர் யோகி பாபுவை நேரில் சந்தித்த புகைப்படங்களை உற்சாகமுடன் வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் 'மண்டேலா' படத்தை பாராட்டியிருந்தார். யோகி பாபு எனது நண்பர்தான் என்றுக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்தார் நடராஜன். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் யோகி பாபுவை கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, நடிகர் யோகி பாபு முருகர் சிலையை பரிசளித்துள்ளார். இவர் ஒரு தீவிர முருகர் பக்தர் என்பதால் அவருக்கு முருகர் சிலையை பரிசாக அளித்துள்ளார்.