சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளத்தில் பாலியல் தொல்லை - போலீசில் புகார்!

Update: 2021-07-04 08:45 GMT

நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதால் போலீசில் புகார் அளித்துள்ளார்.


பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சனம் ஷெட்டி இவர் எப்போதும் பரபரப்பாக தொடர்ந்து இயங்குபவர்.


இந்த நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் வழங்கி உள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News