"எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்" என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமா, வெப் தொடர் போன்றவற்றில் நடித்து வரும் சமந்தா சமீபத்தில் 'தி ஃபேமிலி மேன்' என்ற தொடரில் நடித்தார், அந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து வேதனை அடைந்துள்ளார் சமந்தா. இதுப்பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள், சீண்டல்களை எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரோ ஒருவர் சொல்கிறார் என கடந்து செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் மிகவும் வலிக்கிறது. சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதால் இதை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கையாலேயே இவற்றையெல்லாம் சமாளித்து வருகிறேன்" என்கிறார் சமந்தா.