ஷங்கர் மற்றும் ராம்சரண் இணையும் படம் - முழுவீச்சில் வேலைகள் ஆரம்பம்!

Update: 2021-07-05 09:45 GMT

முழுவீச்சில் துவங்க ஏற்பாடு செய்யப்படுகிறது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம்.


'இந்தியன் 2' வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு சிக்கலில் இருந்து தப்பித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். உடனடியாக தனது அடுத்த படமான ராம் சரண் நடிக்க உள்ள தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். 5 மொழிகளில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவிக்கிறது.


படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் இருப்பார் என முன்னர் தகவல் வந்தது. ஆனால், தற்போது தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News