நடிகை யாஷிகா ஆனந்த் முதல்வர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவலை வேண்டாம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். மேலும் பல கவர்ச்சியான படங்கள் மூலம் இணையத்தில் பிரபலமானவர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல்வர் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் மேற்கொண்டார். அவருக்கு அதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை அவர் சைக்கிளிங் செய்தார்.
அப்பொழுது நடிகை யாஷிகா ஆனந்த் முதல்வர் சைக்கிள் சென்றபோது அவருடன் செல்பி எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை யாஷிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறுபுறம் மாஸ்க் அடியாமல் முதல்வர் சைக்கிளிங் செல்வது பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பதாக கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.