ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' ஓ.டி.டி வெளியீடு தேதி அறிவிப்பு!

Update: 2021-07-11 05:15 GMT

ஆர்யாவின் அடுந்த படமான 'சார்பட்டா பரம்பரை' ஓ.டி.டி'யில் வெளியாகவுள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் அலையாக பரவிய போது ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். இதன் தொடர்ச்சியாக சூர்யாவின் 'சூரரைப் போற்று', மாதவன் நடித்த 'சைலன்ஸ்', ஜெயம் ரவி நடித்த 'பூமி', ஆர்யா நடித்த 'டெடி' ஆகிய படங்கள் திரையரங்கு திறப்பதை எதிர்பாராமல் ஓ.டி.டி'யில் வெளியாகி வரவேற்பை பெற்றன.


இந்த வரிசையில் ஆர்யா நடித்துள்ள அடுத்த படமான 'சார்பட்டா பரம்பரை' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் ஜுலை 22'ம் தேதி அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

Similar News