'விக்ரம் வேதா' இந்திப்பதிப்பில் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடிப்பதாக தகவல் உறுதியாகியுள்ளது.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து 2017-ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற படம் 'விக்ரம் வேதா', இதன் இந்தி பதிப்பில் யார் நடிப்பார்கள் என அடிக்கடி செய்திகள் வருவதும், பிறகு இல்லை என்பதும் வழக்கமாகவே இருந்தது.
தற்பொழுது இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடிக்கப் போவதாக மீண்டும் செய்திகள் வந்துள்ளன. 2022 செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.