இயக்குனர் வினாத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'வலிமை'. படத்தின் விடுபட்ட காட்சிகளை படமாக்க இன்று ஐதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளதாம். சில நாட்கள் மட்டும் அப்படப்பிடிப்பு நடக்குமாம். அதன்பிறகு கடைசி கட்டமாக எடுக்கப்பட வேண்டிய அந்த சண்டைக் காட்சியை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்த பிறகுதான் 'வலிமை அப்டேட்' கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் என தகவல்கள் வந்தாலும் ரசிகர்களுக்காக வேண்டி வரும் ஜுலை 15-ஆம் தேதி படத்தின் சிறப்பு தகவல் வரும் என தெரிகிறது.