வெளியானது 'தல' அஜித்'ன் 'வலிமை' பட மோஷன் போஸ்டர்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'தல' அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத தயாரிப்பு நிறுவனம் இன்று மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதனால் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு மைதானங்கள், விமானம் என செல்லும் இடங்களில் எல்லாம் 'வலிமை அப்டேட்' எங்க என கேட்டு வந்த 'தல' ரசிகர்கள் ஆராவாரம் அடைந்துள்ளனர்.
'வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் கேங்ஸ்டர், பைக் சாகசம், அஜித் அவர்களின் ஸ்டைலான லுக் என மோஷன் போஸ்டர் களை கட்டியுள்ளது.