என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன் - விஜய் சேதுபதி!

Update: 2021-07-14 02:30 GMT

தற்போதைய தமிழ் திரையுலகில் அதிகபட்சம் கதாபாத்திரங்களில் நடிப்பவர் கதாநாயகன் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், நட்புக்காக கதாபாத்திரங்கள் என பலவகையான கதாபாத்திரங்களில் இவரை திரைசில் காணலாம்.


மேலும் இவர் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசியதாவது, "என்னைப் பொறுத்தவரை திரைப்படங்கள், வெப்சீரிஸ் இரண்டையுமே ஒரே மாதிரியாகத் தான் நினைக்கிறேன். ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன்" என்றார்.


மேலும் பேசிய அவர், "எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன்." என்றார்.

Similar News