தெலுங்கில் ராணாவுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள "விராட்டா பர்வம்" ஓ.டி.டி'யில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வேணு உடுகுலா இயக்கியுள்ள "விராட்டா பர்வம்" 1990-களில் தெலுங்கானா கிராமத்தில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது, இதில் ராணா கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற படங்களின் ஓ.டி.டி வெளியீடு வெற்றியால் தற்பொழுது நெட்பிளிக்சுடன் பேசி வருகின்றனர். அடுத்த மாதம் இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.