பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. நீலம் புரொடக்சன்ஸ், கே9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் துஷாரா, பசுபதி, கலையரசன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தபடம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரில் ஆர்யாவின் மொத்த உழைப்பும் தெரிகிறது. இப்படத்திற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை டிரைலர் பார்க்கும்போதே தெரிகிறது என இதுவரை பார்த்தவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.