இமாலய சாதனை படைத்த வலிமை பட முதல்பார்வை!

Update: 2021-07-14 02:15 GMT

காலதாமதமாக வந்தாலும் 'வலிமை' போஸ்டர் சாதனை நிகழ்த்தியுள்ளது.


நடிகர் அஜித்தின் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். நேற்று முன் தினம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.


இது வெளியான உடன் தல ரசிகர்கள் சாதனையை அடிக்க துவங்கிவிட்டனர் யூடியூப்பில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் வீடியோவானது வெளியான 15 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. அதோடு, போஸ்டர் இணையத்தில் 5 மில்லியன் லைக்குளை 12 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

Similar News