மேற்கு வங்கம் கிளம்பும் சூப்பர் ஸ்டார் - 'அண்ணாத்த' ஸ்டார்ட்!

Update: 2021-07-14 02:45 GMT

'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மேற்கு வங்கம் பயணமாகிறார்.


ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4'ம் தேதி தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.


சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். இந்நிலையில் தற்போது அவர் இன்று 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்ல இருக்கிறார். இன்னும் 20 நாட்கள் வரை படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News