திருமணத்திற்கு பிறகு நாகார்ஜுனாவுடன் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்.
கொரோனோ ஊரடங்கு சமயத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து இயக்குனர் பிரவீன் சத்தார் இயக்கும் புதிய படத்திற்கு "ஆக்சன் திரில்லர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மீண்டும் நாகார்ஜூனா - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.