வாராவாரம் 'வலிமை' அப்டேட்டை கொடுப்பதென படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
இயக்குனர் வினோத் இயக்கி உள்ள நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் வாரத்துக்கு ஒரு அப்டேட் வீதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வலிமை படத்தின் டீசர் ரிலீசுக்கு முன்பாக, படத்திலிருந்து 2 சிங்கிள் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.