'களவாணி' இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா!

Update: 2021-07-16 09:30 GMT

அதர்வா அடுத்ததாக இயக்குனர் சற்குணம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. இவர் அடுத்தபடியாக களவாணி, வாகை சூட வா, நய்யாண்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Similar News