காஜல் அகர்வாலின் புதிய படம் 'கருங்காப்பியம்' முதல் பார்வை வெளியீடு!

Update: 2021-07-17 02:45 GMT

காஜல் அகர்வால் நடிக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகியுள்ளது.


'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிகின்றனர்.


பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இதன் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.

Similar News