பெரும் வரவேற்பை பெற்ற வெற்றிமாறனின் 'வாடிவாசல்' தலைப்பு முதல் பார்வை!

Update: 2021-07-17 02:30 GMT

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'வாடிவாசல்' இதன் முதல் பார்வை நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். எஸ்.தாணு தயாரிக்கிறார், இப்படத்தின் தலைப்பு முதல் பார்வை கொம்பு சீவி விட்ட காளை போல் மிரட்டலான எழுத்துக்களின் வடிவத்தில் 'வாடிவாசல்' எனும் தலைப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு தலைப்புக்கு மேலே காளையின் அடையாளமும் இடம்பெற்றுள்ளது. இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


வாடிவாசல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Similar News