புகழ் பெற்ற சித்த மருத்துவர் கே.வீரபாபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
தீவிர ரஜினி ரசிகராக சித்த மருத்துவர் வீரபாபு, கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, மரணமின்றி குணப்படுத்தப்பட்டது. மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து வந்தார்.
தற்போது இவர் முடக்கருத்தான் எனும் புதிய படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைக்கிறார். பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார்.