யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த விக்ரம் பிரபுவின் "டாணாக்காரன்" டீசர்!
யூ டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது விக்ரம் பிரபு'வின் "டாணக்காரன்" டீசர்.
இயக்குனர் தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாணாக்காரன்', இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். தற்போது யு டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இந்த டீசர் பிடித்துள்ளது.
போலீஸ் வேலையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவலர் பயிற்சிப் பள்ளியில் அதிகாரியாக இருக்கும் லால் எவ்வளவு கடுமையாக பயிற்சிகளை அளிக்கிறார். அவரது பயிற்சியில் உள்ள கொடுமைகள், அரசியல் என்ன என்பதும் டீசரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.