காஜல் அகர்வால் நடித்த "பாரிஸ் பாரிஸ்" ஓ.டி.டி-யில் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
2014'ல் ஹிந்தியில் கங்கனா ரணவத் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற படம் குயின். அப்படத்தை தமிழில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, 2017ல் படத்தை ஆரம்பித்தார்கள். அது போலவே மற்ற மொழிகளிலும் படப்பிடிப்பு ஆரம்பமானது. 2018 ஜுன் மாதத்தில் நான்கு மொழிகளிலும் படப்பிடிப்பு முடிவடைந்தது. டிசம்பர் மாதத்தில் படத்தின் டீசரை வெளியிட்டார்கள். தமிழ் டீசர் இதுவரையிலும் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. முடங்கியிருக்கும் படங்களுக்கு இப்போது ஓ.டி.டி தான் விடிவுகாலமாக இருக்கிறது. அப்படியாவது "பாரிஸ் பாரிஸ்" படம் வெளியாகுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.