தீபாவளிக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்துடன் அஜித் நடித்த 'வலிமை' மோதவுள்ளதாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் சமீபத்தில் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
கொரோனோ இரண்டாம் அலை, ஊரடங்கால் திரையரங்கு வருமானம் இழப்பு என தடுமாறி இருக்கும் திரையரங்கு வருமானத்தை இவ்விரு படங்களும் கண்டிப்பாக தூக்கி நிறுத்தும் என இப்பொழுதே நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.