மீண்டும் திரையுலகம் திரும்பிய உதயநிதி - மகிழ்திருமேனி இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்!

Update: 2021-07-20 07:15 GMT

தேர்தலில் ஜெயித்த பிறகு மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார் தமிழக முதல்வரின் மகன் உதயநிதி.


இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதியே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.


மேலும் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்போது இவர்களுடன் பிக் பாஸ் ஆரவும் இணைந்திருக்கிறார். தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இதன் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News