முதலிடத்தில் ராஷ்மிகா மந்தனா - எதில் தெரியுமா?

Update: 2021-07-20 07:15 GMT

இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.


கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.


இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஆகியோரை விட முதலிடத்தை பிடித்துள்ளார்.

Similar News