'ஆர்.ஆர்.ஆர்' இறுதிகட்ட படப்பிடிப்பில் ஆலியா பட்!

Update: 2021-07-21 03:00 GMT

ஆர்.ஆர்.ஆர் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள ஆலியாபட் ஹைதராபாத் பயணமாகியுள்ளார்.


இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.

இந்த பிரமோஷன் பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் பாடல்களைப் படமாக்க உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் நாயகி ஆலியாபட் நேற்று மாலை ஹைதராபாத்திற்குப் பயணமாகி உள்ளார்.


இந்தியத் திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட வெளியீடாகப் பார்க்கப்படும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனோ இரண்டாம் அலைக்கு பிறகு அதிகளவில் ரசிகர்களை திரையரங்கு நோக்கி வரவழைக்க 'ஆர்.ஆர்.ஆர்' பட வெளியீடு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Similar News